சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தமிழக முதல்வர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா: குடும்பத்துடன் சாமி தரிசனம்

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள அவரது வீட்டில்  இன்று காலை குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு பொதுஇடங்களில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 20ம் தேதி சேலம் வந்தார். நெடுஞ்சாலை நகரில் இருக்கும் வீட்டில் உள்ள அவர், இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே எளிமையாக கொண் டாடினார். இதற்காக வீட்டின் முன்புறம் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது. தமிழக முதல்வர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>