பல வழக்குகளில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்: பாகிஸ்தான் அரசு ஒப்புதல்

இஸ்லாமாபாத்: உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மும்பையில் 1993-ம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றவாளியாக இந்தியாவால் தாவூத் இப்ராஹிம் தேடப்பட்டு வருகிறார். தற்போது அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கிளிஃப்டன் பகுதியில் சௌதி மசூதிக்கு அருகே இருக்கும் ஒயிட் ஹவுஸ், எனும் வீட்டில் இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: