×

ஜம்முவில் இந்திய விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

ஜம்மு: இந்திய விமானப்படையை சேர்ந்த அதிகாரி இந்தர் பால் சிங் ஜம்மு முகாமில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வாரண்ட் அதிகாரியான இந்தர் பால் சிங்கின் வயது 53. ஜம்முவின் புறநகரில் உள்ள கலு சக் விமானப்படை தளத்தில் இந்த தற்கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

பிரேத பரிசோதனை மற்றும் கோவிட் -19 சோதனை நடத்திய பின்னர், இறந்தவரின் சடலம் இன்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாதம் ஜம்மு பகுதியிலுள்ள ஐ.ஏ.எஃப் ஊழியர்களிடையே இரண்டாவதாக தற்கொலை செய்து கொண்ட நபர் இவராகும். முன்னதாக ஆகஸ்ட் 8ஆம் தேதி ஐ.ஏ.எஃப் ஜவான் உதம்பூர் மாவட்டத்தில் தனது சேவை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.Tags : officer ,Indian Air Force ,suicide , Suicide, Air Force officer
× RELATED இந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட...