×

பாடகர் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.எம் மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை சரியானது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பி.யை பல்துறை மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொற்றுநோய், மருந்துத்துறை, எக்மோ சிகிச்சை நிபுணர்கள் எஸ்.பி.பி.யை கண்காணித்து வருகின்றனர். வென்டிலேட்டருடன் எக்மோ கருவியுடன் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை ஒரேநிலையில் உள்ளதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த 5-ம் தேதியில் இருந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கடந்த 13-ம் தேதியிலிருந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.

நுரையீரல் தொற்று கடுமையாக தாக்கி நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு சென்றதால் செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்க முடிவெடுத்தனர் மருத்துவர்கள். தொடர்ந்து 10 நாள்களாக செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறது. அவருக்கு பலரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.



Tags : Singer ,SBP ,Corona , SBP, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...