×

ரஃபேல் குறித்த விவரங்கள் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ரஃபேல் குறித்த விவரங்கள் நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவிடம் முதல் ரஃபேல் விமானம் 2019ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்பான முழுமையான விவரங்கள், செலவுகள் குறித்த விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விரைவில் அளிக்கும். சிஏஜி அறிக்கை 2019 - 2020 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யவதாக இருந்தது.  மேலும் கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே முடிக்கப்பட்டுவிட்டதால், ரஃபேல் தொடர்பான விவரங்கள் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்பிக்கப்பட்ட பின்பே தெரிய வரும், என கூறியுள்ளார்.

முன்னதாக, பாதுகாப்புத் துறை தொடர்பான கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான தனது செயல்பாட்டு தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமை தணிக்கையாளர், மத்திய அரசிடம் சமர்ப்பித்து 8 மாதங்கள் ஆன நிலையில், அதில் ரஃபேல் விமானங்கள் தொடர்பான எதுவும் இடம்பெறவில்லை என்று தொடர்புடைய தகவல்கள் வெளியாகின. அந்த தணிக்கை அறிக்கையை மத்திய அரசு இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும், ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் கொள்முதல் தொடர்பான எந்த தகவலையும், தல‍ைமை தணிக்கையாளருக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கவில்லை. ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன், ஒப்பந்தம் முடிந்த 3 ஆண்டுகள் கழித்தப் பின்னரே எந்த விபரங்களையும் வெளியிடும் விதிமுறை கொண்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தலைமை தணிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Nirmala Sitharaman ,session ,Raphael ,Parliamentary , Raphael, Parliamentary Session, Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...