×

ஊரடங்கால் தடைப் பட்ட ''சூரரைப் போற்று''திரைப்படம்: வரும் அக்டோபர் 30ம் தேதி OTT- தளத்தில் வெளியாகிறது; நடிகர் சூர்யா அறிவிப்பு..!!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவால் தடைப்பட்டு வெளியாகாமல் இருக்கும் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 30ம் தேதி OTT- தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த நிலையில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படம் நேரடியாக  OTT- தளத்தில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று& இப்படத்தை துரோகம் இறுதிச் சுற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஏர் டெக்கான் உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை அமலில் உள்ளது. இதில் திரையரங்குகள் திறக்க விதிக்கப்பட்ட தடையும் தொடர்கிறது. இதனையடுத்து, தற்போது நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிப்பதாவது: தனது நடிப்பிலும் பலரது உழைப்பிலும் உருவான சூரரைப்போற்று திரைப்படம் அமேசானில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும். திரையரங்கில் சூரரைப்போற்று வெளியிடுவதற்கான கால சூழ்நிலை தற்போது இல்லை என்றும் , சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும். இந்த கொரோனா காலத்தில் தன்னலம் பாராமல் உழைப்பவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று அவரது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.


Tags : OTT ,announcement ,Actor Surya ,Praise Surya , Praise Surya, Movie, OTT, Actor Surya, Announcement
× RELATED கலகல அதிரடி ‘உப்பு புளி காரம்’ சீரிஸ்… மே 30 முதல் ஓடிடியில்!