×

ஐஸ் கட்டியில் தயாரான ஐம்பது கிலோ விநாயகர்: கூடலூர் இளைஞர் அசத்தல்

ஆண்டிபட்டி: கூடலூரைச் சேர்ந்த இளைஞர் ஐஸ் கட்டியில் விநாயகர் சிலை செய்து அசத்தியுள்ளார். தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேனி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ஐஸ் கம்பெனியில், 50 கிலோ எடையுள்ள ஐஸ் கட்டியை 30 நிமிடங்களில் கல்லை செதுக்குவது போல, உளியால் செதுக்கி அற்புதமான விநாயகர் சிலையாக நேற்று உருவாக்கினார். இந்த ஐஸ்கட்டி விநாயகர் சிலை 8 மணிநேரத்தில் கரைந்து தண்ணீராகி விடும் என்றார். இளஞ்செழியன் கூறுகையில், ‘‘சதுர்த்தி விழாவுக்கு சாதாரண சிலையை வைத்து வழிபட்டு, அதனை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ஐஸ் கட்டியில் செய்த விநாயகர் சிலை 8 மணிநேரத்தில் தானாக கரைந்து விடும். இந்த சிலையை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல தேவையில்லை. தண்ணீரை ஐஸ்கட்டியாக மாற்றி, அதில் சிலை செய்தேன். இந்த ஐஸ் கட்டி கரைவதைப் போல, நாட்டில் கொரோனாவும் கரைந்து காணாமல் போக வேண்டும்’’ என்றார்.

Tags : Ganesha , Ice cubes, fifty kilos, Ganesha, Kudalur youth, astounding
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி