×

புரூக் லேண்ட் பகுதியில் சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து அதிகரித்து வரும் கட்டிடங்கள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நாளுக்கு,நாள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்து வருகிறது. இரண்டு மாடிக்கு மேல், கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டிடங்கள் கட்ட சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் தலையீடு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றினை ஆக்கிரமித்து 4 முதல் 5 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையால் ஆக்கிரமிப்புகள் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள நீர் புகுந்து குன்னூர் நகரமே கடும் பாதிப்புக்குள்ளாகியது. தன்னார்வலர்கள் இணைந்து குன்னூர் ஆற்றினை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், குன்னூர் மக்கள் விதிமுறைகளை மீறி ஆறுகளையும், சதுப்பு நிலங்களையும் ஆக்கி ரமித்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வீடு கட்டக்கூடாது என விதிமுறைகள் இருந்தும், அரசியல் பலத்தை கொண்டு நான்கு முதல் ஐந்து மாடிகள் கட்டி வருகின்றனர்.புரூக் லேண்ட் பகுதியில் சதுப்பு நிலங்களில் காட்டேஜ்களும்,ரெசார்ட்டுகளும் அதிகளவில் கட்டியுள்ளனர். ஓடைக்கு மேல் கட்டிடங்கள் கட்டியுள்ளனர். வரலாற்று குறிப்புகளில்  ஆங்கிலேயர் காலத்தில் புரூக் லேண்ட் பகுதி சதுப்பு நிலம் என்பது புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் முக்கிய ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவதால் அதிக மழைப்பொழிவு காலங்களில் மண்சரிவு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி அதிகாரிகள் நேர்மையுடன் செயல்பட்டு ஆக்கிரமிப்பு  கட்டிடங்களுக்கு சீல் வைத்தால், ஆளுங்கட்சியினர் தங்களது செல்வாக்கால் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்கின்றனர். இது போன்ற காரணங்களால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர். சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் அனைத்திலும் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.இந்நிலை தொடர்ந்தால் எதிர் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் பருவ மழைப்பொழிவு காலங்களில் பேரழிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதுடன்  ஆக்கிரமிப்பு கட்டிடங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Brookland ,buildings , Brookland area, swamps, occupied, buildings
× RELATED வாட்டி வதைக்கும்...