விநாயகர் சதுர்த்தி ஜனாதிபதி வாழ்த்து

புதுடெல்லி: உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு: இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரின் அவதாரத் திருநாள், விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. உற்சாகமும், மகிழ்ச்சியுமாய் கொண்டாடப்படும் இந்த திருநாள், நாட்டு மக்களிடையே சகிப்புத்தன்மையை உருவாக்கட்டும். கொரோனா நோய் தொற்றால் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறோம்.

இந்த வினையிலிருந்து நாம் மீண்டு வர, விநாயகர் அருள் புரிய பிரார்த்திக்கிறேன். சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஏற்பட உறுதி எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன். எல்லோருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Related Stories:

>