×

மணல் கடத்தலை தடுக்க ஐகோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசு கடைபிடிப்பது போல தெரியவில்லை: நீதிபதிகள் கண்டிப்பு

மதுரை: கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவன், ஐகோர்ட் மதுரை கிளையில் காவிரியில் மணல் கடத்தலை தடுக்க  உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன்,  ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.   அப்போது நீதிபதிகள், ‘‘மணல் கடத்தலை முற்றிலும் தடுப்பதற்கு  என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வழக்குகள் பதிந்தால் மட்டும் போதுமா? வாகனங்களை எப்போது பறிமுதல் செய்வீர்கள்? மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதில் எந்த உத்தரவையும் கடைப்பிடிப்பது போல் தெரியவில்லை. சிவகங்கை மற்றும் கரூரில்தான் அதிக மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐகோர்ட் கிளையில் தினமும் 5 முதல் 6 மணல் கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு வருகிறது. எனவே மணல் கடத்தலை தடுக்க உரிய விதிமுறைகளை வகுக்க பொதுநலன் கருதி இவ்வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை  ஒத்திவைத்தனர்.


Tags : government ,Judges ,ICC , Sand smuggling, High Court judges
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...