ஈரோடு கலெக்டர் கதிரவனுக்கு கொரோனா

ஈரோடு: ஈரோடு கலெக்டருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனால், நேற்றுமுன்தினம் விழாவில் அவருடன் பங்கேற்ற அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோருக்கு கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.ஈரோடு கலெக்டர் கதிரவனுக்கு கடந்த 2 நாட்களாக லேசான உடல் வலி இருந்து வந்தது. சந்தேகத்தின்பேரில், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று வெளியான முடிவில் கதிரவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து தனது வீட்டிலேயே கலெக்டர் கதிரவன் தனிமைப்படுத்திக்கொண்டார். கலெக்டர் கதிரவன் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி அருகே நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார்.  

அந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணியம், ராமலிங்கம், தென்னரசு, ஈரோடு எஸ்.பி. தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் தங்கமணி நேற்று நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவிலும் பங்கேற்றார். இதனால், 3 அமைச்சர்கள், 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது. இவர்களில், கலெக்டருடன் விழாவில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.

Related Stories: