×

கொரோனாவால் மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை திறக்ககோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை:ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக மூடியிருக்கும் குற்றவியல் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் முகமது கவுஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, சென்னை உயர்மன்ற பதிவாளரை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர். அதில், “கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதமாக குற்றவியல் நீதிமன்றத்தை திறக்கவில்லை. இதனால் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, மூடப்பட்டுள்ள குற்றவியல் நீதிமன்றங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.


Tags : Lawyers ,courts ,Corona , Corona, Courts, Lawyers, Demonstration
× RELATED இடைக்கால ஜீவனாம்ச உத்தரவு மீது மேல்...