×

புதிய பாலிஸ்டிக் ரக ஏவுகணை, க்ருஸ் ரக ஏவுகணையை அறிமுகப்படுத்தியது ஈரான்

டெக்ரான்: புதிய பாலிஸ்டிக் ரக ஏவுகணை, க்ருஸ் ரக ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி, அந்த ஏவுகணைகளை ஈரான் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அவற்றை வெளியுலகுக்கு ஈரான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏவுகணைகள் சோதனை காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணை, தரையிலிருந்து பாய்ந்து சென்று 1400 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் வல்லமை உடையதாகும். க்ருஸ் ஏவுகணை 1,000 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் வலிமை கொண்டதாகும். பாலிஸ்டிக் ஏவுகணைக்கு அமெரிக்க தாக்குதலில் பலியான முன்னாள் தளபதி சுலைமானி பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கும் வகையில், 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அந்நாடு இணங்கவில்லை என்று குற்றம்சாட்டி நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா கடிதம் அனுப்பியது. ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தியது. இதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணு ஆயுத உற்பத்தி தடுக்க பொறுப்புள்ள நாடுகள் அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : Iran , Iran, missile
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...