ஆண் நண்பர்களுடன் ஓட்டலில் கொண்டாட்டம்; போதையில் இருந்த சிறுமியை 30 பேர் கும்பல் பலாத்காரம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனம்

டெல் அவிவ்: இஸ்ரேலில் ஆண் நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்ற சிறுமி போதையில் இருந்ததால், அவரை 30 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை அந்நாட்டு பிரதமர் கடுமையாக கண்டித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் கடலோர நகரமான டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் 16 வயது சிறுமி 30 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஓட்டலில் சம்பவம் நடந்த போது சிறுமி குடிபோதையில் இருந்தார். அவர், தனது ஆண் நண்பர்கள் சிலருடன் ஓட்டலுக்கு வந்தார்.

சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இருப்பினும் அது சிறுமியின் சம்மதத்துடன் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு குளியலறைக்குள் சென்றார். அங்கிருந்த ஒருவன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். பின்னர் வெளியே வந்த சிறுமியை கும்பலாக சென்று பாலியல் சீண்டல் செய்துள்ளனர். சந்தேக நபர்களில்  ஒருவர் சிறுமி இருந்த அறைக்கு வெளியே நின்று, ஒருவொருவராக பாலியல்  பலாத்காரம் செய்ய அனுமதி அளித்துள்ளார். கிட்டத்தட்ட 30 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த சிறுமி மயக்கமடைந்தும், அவளை ெதாடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி உள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த சிறுமி பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். தாங்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்னர், ஓட்டலில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்றனர். இந்த காட்டுமிராண்டித்தனமான பாலியல் பலாத்கார சம்பவம் சமூக வலைதளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததும்,  இஸ்ரேல் முழுவதும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், ‘சிறுமிக்கு ஏற்பட்ட நிகழ்வு மனித குலத்திற்கு எதிரான குற்றம். இந்த சம்பவத்தால் மிகுந்த மனவருத்தத்தில்  உள்ளேன். இது ஒரு  பெண்ணுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>