×

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை; பொன். ராதாகிருஷ்ணன் பின்னடைவு!!

நாகர்கோவில் : கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பட்டதால் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த  போட்டியிட்டுள்ளார்.இதேபோல், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டது. பாஜக சார்பில் கடந்த முறை வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்கினார். இருவருமே தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகளும் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. அதன்படி முதல் சுற்றில் (கிள்ளியூர் தொகுதியில் மட்டும்) விஜய் வசந்த்( காங்கிரஸ்) 4533 வாக்குகளும், பொன். ராதாகிருஷ்ணன்( பாஜ) 1164 வாக்குகளும், அனிட்டர் ஆல்வின்(நாம் தமிழர்) 652 வாக்குகளும், டாக்டர் சுபா. சார்லஸ் (மநீம) 104 வாக்குகளும் பெற்றிருந்தனர். முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 3369 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்….

The post கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை; பொன். ராதாகிருஷ்ணன் பின்னடைவு!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Lok Sabha Constituency ,Congress ,Vijay Vasanth ,Radhakrishnan ,Nagercoil ,Vasantakumar ,Parliament ,Kanyakumari ,Lok Sabha ,
× RELATED விஜய் வசந்த், தாரகை கத்பர்ட் வெற்றி திமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்