×

பெங்களூரில் வன்முறையை தூண்டிய பிஎப்ஐ, எஸ்டிபிஐ கட்சிகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவு...!!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு கலவரம் மற்றும் மேலும் சில வன்முறை சம்பவங்களில் உள்ள தொடர்பு காரணமாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி( எஸ்டிபிஐ) ஆகியவற்றை தடை செய்வது குறித்து கர்நாடக அரசு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது. பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய பிறகும், சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தடை அமல்படுத்தப்படும். மத ரீதியிலான கலவரம் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்புகளுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும்படி போலீசாரை, மாநில அமைச்சரவை கேட்டு கொண்டுள்ளது.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் முத்துசுவாமி கூறியதாவது: பெங்களூரு கலவரம் தொடர்பாகவும், இந்த அமைப்புகளின் தொடர்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். ஆனால், போலீசாரிடம் இருந்து எந்த பரிந்துரையும் வராததால், குறிப்பிட்ட எந்த முடிவையும் எடுக்கவில்லை. போலீசாரிடம் இருந்து அறிக்கை வந்த பிறகு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இதில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நடந்த கலவரத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய எஸ்டிபிஐ, பிஎப்ஐ மற்றும் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து வாய்ப்புகளையும் ஆலோசித்து வருகிறோம்.

பொது சொத்துக்கு ஏற்பட்ட சேதத்தை அவர்களிடம் இருந்து வசூலிப்பது தொடர்பாக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இழப்பீட்டை வசூலிக்க சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கவும் தயங்க மாட்டோம் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Government ,parties ,Karnataka ,STPI ,Bangalore ,STPI Party ,Government of Karnataka , Violence in Bangalore, PFI, STPI Party, Government of Karnataka
× RELATED பெங்களூரில் ஜூன் 15,16 தேதிகளில் கர்நாடக...