பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது!: வெண்டிலேட்டர், எக்மோ உதவியுடன் தொடர் சிகிச்சை..மருத்துவமனை தகவல்..!!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 5ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3 தினங்களாக எஸ்.பி.பி.-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.பி.க்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை விவரங்கள் குறித்து அவ்வப்போது அவரது குடும்பத்தினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அளிக்கப்பட்ட அறிக்கையில், எஸ்.பி.பி.க்கு சர்வதேச மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சையும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எஸ்.பி.பியை மருத்துவர் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் தமிழகம் முழுவதுமே திரைத்துறையினர், மக்கள் அனைவரும் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து மீண்டும் திரையுலகில் பாட வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்தார்கள். அதனை அடுத்து மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி-யின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது திரைத்துறையினர் மற்றும் எஸ்.பி.பி - யின் ரசிகர்களுக்கு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

Related Stories:

>