×

கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக வரும் 24ம் தேதி காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்...!!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்படும் பல்வேறு தரப்பிலான பிரச்சனைகளால் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வருகின்ற திங்கட்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதில் கேரள மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்  ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது: முதலமைச்சர் பினராயி விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து,அரசுக்கு எதிராக வரும் திங்கட்கிழமை 24ம் தேதி  சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம்.  

மேலும், லைஃப் மிஷனுக்குப் பின்னால் சட்டவிரோத ஒப்பந்தங்கள் குறித்து மக்களிடம் பொய் சொல்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஊழல் அதிகரித்து உள்ளது என குற்றம்சாட்டினார். இதனையடுத்து, ரெட் கிரசண்ட் மற்றும் யூனிடாக் இடையேயான ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது என்று சென்னிதாலா அவரது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதில் உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு 5 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன. இந்த கலந்துரையாடல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் தங்கக் கடத்தல் வழக்கும் மையமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : party ,Congress ,government ,Kerala ,Binarayi Vijayan ,Binarayi Vijayan Government , Kerala, Binarayi Vijayan Government, Congress, no-confidence motion.
× RELATED பீகாரில் விகாஷீல் ஸ்வராஜ் கட்சி காங்கிரசில் ஐக்கியம்