×

பொதுத்தேர்தல், இடைத்தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு; பரப்புரையின்போது தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

டெல்லி: கொரோனா காலத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்தல், இடைத்தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கொரோனா தொற்றானது நாடு முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவின் தாக்கம் மட்டுமல்லாமல் அதனால் பலியாகுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய காலக்கட்டத்தில் எவ்வாறு தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் கடந்த 2 மாதங்களாக பல்வேறு ஆய்வுகளையும் பல்வேறு கட்டமான ஆலோசனைகளையும் மேற்கொண்டது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேர்தல்களை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்; தேர்தல் தொடர்பான எல்லா பணியின் போதும் கட்டாயம் முகக்கவசம் என்பது ஒவ்வொரு தனி நபரும் அணிந்திருக்க வேண்டும். தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடிய அனைத்து பகுதிகளிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். சோப்பு மட்டுமல்லாமல் சானிடைசர், போன்ற பொருட்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

சமூக இடைவெளியுடன் தான் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையை தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா கால முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாநில, மாவட்ட, மற்றும் சட்டமன்ற தொகுதி ரீதியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் தாக்கல் செய்த வேட்புமனுவில் நகலை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

பரப்புரையின்போது தனிநபர் இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். வேட்பாளர் உள்ளிட்ட 5 பேருக்கு மேல் பரப்புரைக்கு அனுமதிக்க கூடாது. மின்னனு வாக்கு இயந்திரங்களை தூய்மைப்படுத்தியபிறகே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1000 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : by-elections ,Election Commission ,campaign ,By-Election ,Electoral Commission ,General Election , General Election, By-Election, Guidelines, Electoral Commission
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...