×

ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது..!!

சென்னை: ரவுடி சங்கர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது. இன்று காலை பிரபல ரவுடி சங்கர் நியூ ஆவடி ரோடு பகுதியில் ஆய்வாளர் நடராஜன் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். காவலரை தாக்க முற்பட்ட போது இந்த என்கவுன்டர் சம்பவமானது நடைபெற்றுள்ளது. இதுபோன்று என்கவுன்டர் சம்பவங்கள் நடைபெறும் போது அது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்படும். அந்த அடிப்படையில் தான் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரையிடம் இந்த விசாரணையானது நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அது தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் ஒப்படைக்க விரைத்திருக்கின்றனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, என்கவுன்டர் நடந்த இடத்திலும், அதுமட்டுமின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கின்ற ரவுடி சங்கர் உடலையும் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக வீடியோ பதிவின் மூலமாக அதிகாரிகளின் கண் முன் தான் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனையானது நடைபெறும்.

அதன் பின்னர் உறவினர்களிடமும் விசாரணையானது நடத்தப்படவிருக்கிறது. அதேநேரத்தில் என்கவுன்டர் செய்ய ஆய்வாளர் நடராஜன், காயமடைந்த முபாரக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. உறவினர்கள் தொடர்ந்து காவல்துறையினரை குற்றம்சாட்டி வருகின்றனர். இது திட்டமிட்ட சதி எனவும், வேண்டுமென்றே அவரை அழைத்து சென்று என்கவுன்டர் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திடமும் புகார் அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணையில் கிடைக்கும் அறிக்கையை அடிப்படையாக வைத்து தான் அடுத்தகட்ட நகர்வானது எடுக்கப்படவுள்ளது.

Tags : Magistrate ,encounter ,Rowdy Shankar ,Magistrate Investigation , Rowdy Shankar, Encounter, Magistrate Investigation
× RELATED ராஜஸ்தானில் பலாத்கார காயங்களை காட்டச்சொன்ன நீதிபதி மீது வழக்கு..!!