×

நாட்டு மக்களாலும், நாட்டின் பிரதமராலும் நேசிக்கப்படுவதை விட சிறந்த பாராட்டு எதுவும் இல்லை: சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி

புதுடெல்லி: நாட்டு மக்களாலும், நாட்டின் பிரதமராலும் நேசிக்கப்படுவதை விட சிறந்த பாராட்டு எதுவும் இல்லை என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மடல் அனுப்பியதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கூடுதல் வருத்தத்தை உண்டாக்கியது. இதில் தோனியாவது 39 வயதில் ஓய்வு அறிவித்தார், ஆனால் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது. இதையடுத்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில், பிரதமர் மோடி, எம்ஸ்.தோனி அவர்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பி பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

அதில், தோனியை புதிய இந்தியாவின் உத்வேகத்தின் எடுத்துக்காட்டு என்று பாராட்டினார். அதே போல் ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட்டுக்காவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள், அதை நான் ஓய்வு என்று சொல்லமாட்டேன். இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவில் முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன், என மோடி கூறியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியில் கடிதத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுரேஷ் ரெய்னா, நாங்கள் விளையாடும்போது தேசத்திற்காக எங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டு மக்களின் அன்பு போல் சிறந்த பாராட்டு வேறொன்றும் இல்லை. அதிலும் நாட்டின் பிரதமரே அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும் என்ற தோனியில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன். ஜெய் ஹிந்த், என கூறியுள்ளார்.
 

Tags : country , Suresh Raina, Prime Minister Modi, congratulatory letter
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!