×

சின்னமனூரில் கழிவுநீர் கால்வாயான நீர்வரத்துக் கால்வாய்: பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

சின்னமனூர்: சின்னமனூரில் நீர்வரத்துக் கால்வாயான பிடிஆர் கால்வாயில் குப்பைகளுடன் கழிவுநீர் தேங்கியிருப்பதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சின்னமனூரில் சொக்கநாதபுரத்திலிருந்து வ.உ.சி தெரு மற்றும் சாமிகுளம் வழியாக 2 கி.மீ தூரத்திற்கு பி.டி.ஆர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இருபுறமும் சாமிகுளம், வ.உ.சி தெரு, காந்திநகர, சொக்கநாதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த கால்வாய் வழியாக பாசன நீர் செல்லும். இந்நிலையில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பிடிஆர் கால்வாய்க்குள் கலக்குகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைக் கூலங்களுடன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதனால், அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பிடிஆர் கால்வாயில் கழிவுநீர் தேங்கியிருப்பது பொதுமக்களுக்கு நோய் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த கால்வாயை தூர்வாருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sewage canal ,Chinnamanur ,public , Chinnamanur, sewage, public, sanitation
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி