×

பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அகற்றம் ராமேஸ்வரத்தில் விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றப்பட்ட நிலையில், இந்து முன்னணி அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்து செல்வதை தடுக்க போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு தடை விதித்தது. ராமேஸ்வரத்தில் விநாயகர் சதுர்த்தியன்று வழக்கம்போல் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட, இந்து முன்னணி சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 விநாயகர் சிலைகள் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதில் 2 சிலைகள் ராமேஸ்வரம் நகரில் வழிபாடு செய்ய வைக்கப்பட்டன.  இவை போலீசாரால் அகற்றப்பட்டன. மேலும் ராமேஸ்வரத்தில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இங்கிருந்து விநாயகர் சிலைகளை எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : idols ,Removal ,places ,Rameswaram ,Ganesha ,Rameshwaram Vinayagar ,roads , Rameshwaram ,Vinayagar idols, vinayagar chathurthi,police
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...