×

மூணாறு நிலச்சரிவில் 14 வது நாளாக நடைபெற்ற மீட்புப்பணியில் மேலும் 2 உடல்கள் மீட்பு: 5 பேரை தேடும் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர், அவர்களது உறவினர்கள் 4 பேர் என மொத்தம் 82 பேர் சிக்கினர். இதில் ஏற்கெனவே 6 மாதக் குழந்தை உள்பட மொத்தம் 63 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 14வது நாளாக இன்று காலையில் தொடங்கியது.

இந்த மீட்பு பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணியில் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்து உள்ளது. மீட்கப்பட்ட உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இன்று காலையும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்புப்படையினர் தங்களது மேலும் 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : rescue operation ,landslide ,search ,Munnar , Three landslides, rescue mission, 2 bodies recovered
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...