×

ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை பிரச்சனைக்கு தீர்வுகாண மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை பிரச்சனைக்கு தீர்வுகாண மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண ஸ்விக்கி நிறுவனத்துக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்விக்கி நிறுவனம் கேட்காவிடில் முதல்வரே ஊழியர்களை அழைத்து பேசி தீர்வு காண ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தை காரணம் காட்டி ஸ்விக்கி நிறுவனம் ஊழியர்களின் ஊதியத்தை குறைத்துள்ளது.

ஊதியம், ஊக்கத்தொகை குறைக்கப்பட்டதை எதிர்த்தே 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ள நிலையில் பிரச்சனைக்கு தீர்வுகாண ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, சமீக காலமாக தங்கள் ஊழியர்களுக்கு அளித்து வரும் ஊதியத்தைப் பெருமளவுக் குறைத்துள்ளது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழையபடி ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் சமீபத்தில் போராடத்தில் குதித்தனர்.



Tags : MK Stalin ,Zwicky , swiggy employee, Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...