மனைவியுடன் கூடா நட்பு கொண்டிருந்த இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை: திண்டிவனத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மனைவி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தியதால், ஆத்திரமடைந்த கணவர் இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். திண்டிவனம் அருகே பூத்தேரியில் ரகுவரன் என்பவர் தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ரகுவரன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சையளிக்க அங்குள்ள மறு வாழ்வு மையத்தில் மகாலட்சுமி அவரை சேர்த்துள்ளார்.

இதற்கிடையே மகாலட்சுமிக்கு விக்னேஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் தகாத உறவாக மாறியதோடு, தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தியும் வந்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரகுவரன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் இதனை ஏற்க மறுத்ததால் ரகுவரன் ஆத்திரத்தில் அரிவாளால் விக்னேஸ்வரனை வெட்டி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சாலையில் கிடந்த அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

இதனையடுத்து ரகுவரனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட விக்னேஸ்வரன் சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் மகாலட்சுமி பணியாற்றியபோது, ஏற்கனவே அவர்களுக்குள் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>