×

காட்டுத்தீயால் தகிக்கும் கலிஃபோர்னியா மாகாணம்!: வீடுகளை விட்டு மக்கள் வெளியேற உத்தரவு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியை தகிக்க வைத்துக் கொண்டிருக்கும் காட்டு தீ பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒன்று, இரண்டு அல்ல சுமார் 100 இடங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள். இதுவரை 3 லட்சம் ஏக்கர் பரப்பை தீ கபளீகரம் செய்துவிட்டது.

தற்போது 85 ஏக்கர் அளவில் எரிந்து வரும் தீயை அணைக்க ஏற்கனவே 7 ஆயிரம் பேர் போராடி வருகிறார்கள். தற்போது நிலைமை கைமீறி போக குடியிருப்புகளை தீ அச்சுறுத்தி வருவதால் மேலும் 125 தீயணைப்பு வாகனங்களும், 1000 வீரர்களும் வேண்டும் என்று நாட்டின் மற்ற மாகாணங்களிடம் கலிஃபோர்னியா உதவி கேட்டுள்ளது. 1 லட்சம் பேர் வசிக்கும் வாகவில்லே  பகுதியை காட்டுத் தீ சுற்றி வளைத்துள்ளது. தொடர்ந்து, 50 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில், 2000 வீடுகள் தீயில் சிக்கும் நிலையில் உள்ளன.

அதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சண்டாகுருஸ், சான்மாடியோ பகுதிகளில் இருந்து சுமார் 22 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 3 நாட்களுக்குள் 11 ஆயிரம் மின்னல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தீ மேலும் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : homes ,California , Wildfire, State of California
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...