×

தென்னையில் காண்டாமிருக வண்டுகளின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் துறை உயர் அதிகாரி ஆலோசனை

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி,நீடாமங்கலம் கோட்டூர்,முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைபூண்டி வட்டாரங்களில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது கடந்த 2008 நவம்பரில் வீசிய கஜா புயலினால் மிகப்பெரிய சேதத்துக்கு உள்ளானது
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினால் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டது. தென்னங்கன்று நிலைமைகளை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்த வேளாண்மை துறைஇயக்குனரக துணை இயக்குனர் பொன்மலர்திருவாரூர் மாவட்டத்திலுள்ள கஜா பாதிக்கப்பட்ட 5 வட்டாரங்களில் ஆய்வு செய்தார்.

மன்னார்குடியில் சுந்தரகோட்டை பரவாக்கோட்டை கோட்டூரில் ராதா நரசிம்மபுரம் முத்துப்பேட்டையில் ஜாம்புவானோடை தில்லைவிளாகம் திருத்துறைப்பூண்டியில் கட்டிமேடு தீவமாபுரம் முதலிய கிராமங்களில் உள்ள தென்னந்தோப்புகளில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது பல தென்னந்தோப்புகளில் விவசாயிகளுடன் கலந்துரையாடி அப்போது காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன்வண்டு தாக்குதல் அதிகமாக இருப்பதாகவும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விவசாயிகள் விளக்கம் கேட்டனர் அதற்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் கூறுகையில்,
தென்னந்தோப்புகளில் குப்பைகள் இன்றி எரு குழிகள இன்றி தோப்பை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்,

ஆமணக்கு புண்ணாக்கு நொதிக்க வைத்து அந்த கலங்களை தோப்பின் சில இடங்களில் வைத்தால் காண்டாமிருக வண்டு அதற்கு கவரப்பட்டு அந்த களத்தில் விழுந்து அழிந்து விடும், மட்டை இடுக்குகளிலும் குரு த்திலும் ஆற்று மணல் மற்றும் கார்போபியூரான் மருந்தினை கலந்து மரத்துக்கு 5 கிராம் வீதம் இட வேண்டும்,உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் இட்டு தென்னங்கன்றுகள் வளமாக வளர்த்தால் பூச்சிகளின் தாக்குதல் இன்றி கட்டுப்படுத்தலாம். என்றார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை உதவி இயக்குனர்( தரக்கட்டுப்பாடு) தங்கபாண்டியன், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் வேளாண்மை உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : attack ,Department of Agriculture , Coconut, Rhinoceros Beetles, Attack, Chief of Agriculture
× RELATED மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது எப்படி?