×

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கம்பம்மெட்டு சாலை திடீர் முடக்கம்

*பல மணிநேரம் காத்திருந்த வாகனங்கள்

கம்பம் : எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கம்பம் மெட்டு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கேரளா செல்லும் வாகனங்கள் பல மணிநேரம் காத்திருந்தன. கம்பத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் கம்பம்மெட்டு சாலை 13 கி.மீ தொலைவில் உள்ளது. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் கடந்த மாதம் இறுதியில் 9வது கிலோ மீட்டரிலிருந்து 13வது கிலோ மீட்டர் வரை புதிய தார்ச்சாலை போடப்பட்டது. இதனால் போக்குவரத்து ஒரு வாரம் குமுளி வழியாக மாற்றி விடப்பட்டது.

இதற்கிடையில் நேற்று காலை 8 மணியிலிருந்து இரவு 9 மணி வரை எவ்வித அறிவிப்புமின்றி திடீரென கம்பம்மெட்டு செல்லும் வாகனங்கள் கம்பம் அடிவாரத்தில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் நிறுத்தப்பட்டன. பாலம் வேலை மீதம் இருந்ததால் தற்சமயம் போக்குவரத்தை அனுமதிக்கவில்லை என போலீசார் கூறினர். இதனால் கேரளா செல்லும் 300க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். குடிக்க தண்ணீர் கூட இல்லாமலும் உணவு இல்லாமலும் கஷ்டப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


Tags : road ,Kambammettu ,Cumbummettu Road , Cumbummettu ,road closed, vehicles
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து