×

வரும் 25ம் தேதி முதல் டி.டி.எட் தேர்வுக்கு ஆன்லைனில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தொடக்க கல்வி பட்டயத் தேர்வு என்னும் டிடிஎட் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் டிடிஎட் படிப்பில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டில் படித்து தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தற்போது தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அப்போது, ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றுகளின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும், ரூ.50, மதிப்பெண் சான்று (முதலாம் ஆண்டு) ரூ100, மதிப்பெண் சான்று (இரண்டாம் ஆண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்தவேண்டும். ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் 28 மற்றும் 29ம்தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும்.

Tags : Individuals ,DDET , From the 25th onwards, the DDET exam can be applied online by individual candidates
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!