×

வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்காத ஓய்வூதியதாரர்களின் பணம் நிறுத்தப்படமாட்டாது - தமிழக அரசு

சென்னை: வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்காத ஓய்வூதியதாரர்களின் பணம் நிறுத்தப்படமாட்டாது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல கருவூல இணை இயக்குனர் கருவூலத்துறை இயக்குனர் சமயமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனால், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கரூவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி, 6 மாதம் பணப்பரிவர்த்தனை நடக்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் உண்மையல்ல. 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை. வாழ்வு சான்றிதழ் கேட்பது வழக்கமான நடைமுறைதான் என்றும், உயிருடன் இருப்பதற்கான உயிர்வாழ் சான்றிதழை இந்தாண்டு ஓய்வூதியதாரர்கள் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.



Tags : Pensioners ,Government of Tamil Nadu , Bank account, pension
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்