×

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பணக்கார நாடுகள் பதுக்கி வைக்கக் கூடாது: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாடிகன்: பணக்கார நாடுகள், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பதுக்கி வைக்கக் கூடாது என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உலகம் முழுவதும் பெரிதாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. ஆனால், ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் பேசிய போப் பிரான்சிஸ், கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்தத் தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச்சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி, உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், இந்த தொற்றுநோய் ஏழைகளின் கடினமான சூழ்நிலையையும் உலகில் ஆட்சி செய்யும் பெரும் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.இந்த வைரஸ் நபர்களிடையே விதிவிலக்குகளை ஏற்படுத்தாவிட்டாலும், அதன் பாதையில், பேரழிவு தரும், பெரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகளைக் கண்டறிந்துள்ளது. இது போன்ற ஒரு சிறிய ஆனால் மிகப்பெரிய வைரஸைக் கண்டுபிடிப்பது இன்றியமையாதது, இது முழு உலகையும் அதன் முழங்கால்களுக்கு அடியில் வைத்துள்ளது, என்று கூறியுள்ளார்.


Tags : Francis Rich ,Pope Francis , Corona, Vaccine, Rich Countries, Pope Francis
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு