×

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில், இந்தியாவில் சிறந்த 9 பல்கலைக்கழகங்களில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இடம்

வேலூர் : உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியாவில் சிறந்த 9 பல்கலைக்கழகங்களில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது.உலக பல்கலைக்கழகங்களின்  கல்வி தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் சாங்காய் தரவரிசை அமைப்பு வெளியிடும். இந்த ஆண்டு அந்த அமைப்பு  உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் முதல் 900 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகப் பல்கலைக்கழகங்களின் கல்வி தர வரிசை பட்டி யலில் விஐடி 901-1000 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த ஆண்டு விஐடி பல்கலைக்கழகம் முன்னேறி 801- 900 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.இந்த ஆண்டு சாங்காய் தரவரிசை அமைப்பின் உலக தரவரிசை பட்டியலில் இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்குள் விஐடி பல்
கலைக்கழகம் மட்டும்தான் முதல் 1000 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான விவரம் சாங்காய் உலக தரவரிசை பட்டியல் இணய தளத்தில் உள்ளது.

இந்தாண்டு உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை பட்டியலில் முதல் ஆயிரம் பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 15 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த ஆண்டு உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த 9 பல்கலைக்கழகங்களில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறுகையில், ‘உலக பல்கலைக்கழக கல்வி தரவரிசை பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்திருப்பதற்கு, விஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கடின உழைப்பும் அவர்களுடைய அர்ப்பணிப்பும்தான் காரணம்’ என்றார்.

சாங்காய் தரவரிசை அமைப்பு கடந்த 2003ம் ஆண்டிலிருந்து வெளிப்படை தன்மையாக பல்வேறு ஆய்வு மற்றும் தகவலின் அடிப்படையில் உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. சாங்காய் உலக தரவரிசை அமைப்பை இந்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியல் இந்திய அரசாங்கம் கல்வி நிறுவனங்களுக்கு ‘சீர்மிகு’ அந்தஸ்து வழங்குவதில் கருத்தில் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : universities ,Vellore VIT University ,India , Vellore VIT University is ranked among the top 9 universities in India in the World University Rankings
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!