×

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இன்று காலை 24,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 35,000 கனஅடியை எட்டியுள்ளது.

வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 98.64 அடியாக சரிந்தது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த 1ஆம் தேதி 73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99.03 அடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் நீர்திறப்பு வினாடிக்கு 16,500 கனஅடியாக இருந்தது. அதேநேரம் வினாடிக்கு 14,182 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று 11,441 கனஅடியாக சரிந்தது.

அணையில் இருந்து டெல்டா கால்வாயில் வினாடிக்கு 17,000 கனஅடி நீர் வெளியேற்றும் நிலையில் வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம் 99.03 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 98.64 அடியாக சரிந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் நேற்று 17,291 கனஅடி, கபினியில் 2,125 கனஅடி என 19,16 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.



Tags : Okanagan , hogenakkal, water
× RELATED மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு