×

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தயாரிக்கும் கொரோனா கோவிஷீல்ட் தடுப்பூசி முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க உள்ளதாக தகவல்...!!!

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தயாரிக்கும் கொரோனா கோவிஷீல்ட் தடுப்பூசி முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  27,67,274 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கி இந்த 7 மாதங்களில் இந்த நோயில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான பேர்  குணமடைந்து உள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்து உள்ளது. மேலும் குணமடைந்தோர் விதிகம் 73 சதவீதத்தைத் தொட்டு உள்ளது, இதனால் இறப்பு வீதமும் குறைந்து 1.91 சதவீதமாக உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நம்பிக்கைக்குரிய பரிசோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி  சோதனைகள் வெற்றிபெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் முதன் முதலாக இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு  உள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் தற்போது 3 கொரோனா தடுப்பூசிகள் முன்னணி சோதனைகளில் உள்ளன, அவை மருத்துவ பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்ற 2 தடுப்பூசிகளை விட முன்னணியில் உள்ளது.

மேலும், பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து உருவாக்கிய இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் மற்றும் ஜைடஸ் காடிலாவின் ஜிகோவ் டி ஆகிய இரண்டும் மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப கட்டங்களில் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு தனது கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கிய ஜைடஸ் காடிலா, அடுத்த ஆண்டுக்குள் தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று தேசிய பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பால், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்த மூன்று தடுப்பூசிகளில் ஒன்று புதன்கிழமைக்குள் மருத்துவத்திற்கு முந்தைய மனித சோதனையின்  மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் என்று தெரியவந்தது. நாட்டின் 17 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேர் பங்குபெறும் சோதனைகளை சீரம் நிறுவனம் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது.

Tags : Oxford University ,Indians , Oxford University's Corona Cow Shield vaccine first available to Indians ... !!!
× RELATED இனி உற்பத்தி, விநியோகம் இல்லை...