×

அரசு உத்தரவை மீறி கடைகள் திறப்பு பெரம்பலூரில் மீன், கறி விற்பனை படுஜோர்

பெரம்பலூர் : கொரோனா பரவலை தடுக்க சனிக்கிழமை மீன், கறிக்கடைகள் திறக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அமையும் மீறி பெரம்பலூரில் மீன், கறிக்கடைகள் திறந்திருந்தது. இவற்றை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.கடந்த 2020ம் ஆண்டு உலகெங்கும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று பரவல், இந்த ஆண்டு 2வது அலையாக உருமாறி அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சமூக இடைவெளியை அதிகரிக்க செய்ய போராடி வருகிறது. இரவுநேர ஊரடங்கு போதாதென்று, மக்கள்கூடுகிற ஞாயிற்றுக்கிழமை முழுநாள் ஊரடங்கையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பிறகுமக்கள் அதிகம் கூடுகிற 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேலுள்ள வர்த்தக நிறுவனங்களை மூட உ த்தரவு பிறப்பித்தது. பின்னர் ஞாயிற்றுகிழமையில் இறைச்சி எடுக்க பழகியவர்கள் அன்று ஊரடங்கு பிறப்பித்ததால் முந்தைய நாளான சனிக்கிழமை கூட்டம் கூட்டமாக வந்து மீன், மட்டன் கடைகளில் கூடியதால் சனிக்கிழமைகளில் இறைச்சி விற்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் நேற்று சனிக்கிழமை பெரம்பலூர் நகரில் மீன், மட்டன் இறைச்சிக்கடைகளில் மக்கள்கூட்டம் அலைமோதியது. உத்தரவை மீறி கடைகளை திறந்தவர்களை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் மக்களும் அச்சமின்றியும், முகக்கவசம் இன்றியும், சமூக இடைவெளி துளியும் இல்லாமல் இறைச்சிகளோடு கொரோனாவையும் சேர்த்து வாங்கிச் சென்றனர். அதேபோல் கண் துடைப்புக்காக 10 கடைகளை மட்டுமே மூடச் செய்துள்ள நகராட்சி நிர்வாகம், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்டுள்ள வார்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது எதனால் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்….

The post அரசு உத்தரவை மீறி கடைகள் திறப்பு பெரம்பலூரில் மீன், கறி விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Badujor ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...