×

இளைஞர்கள் மூலம் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்து; தடுப்பு நடவடிக்கைகளை இரட்டிப்பு ஆக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை!!

ஜெனீவா : ஆசிய - பசிபிக் நாடுகளில் 50 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தகேஷி கசாய், தொற்று பாதித்துள்ள 50 வயதிற்கும் குறைவானவர்களில் பெரும்பாலானோருக்கு தமக்கு தொற்று இருப்பது கூட தெரியவில்லை என்று கூறியுள்ளார். வைரஸ் தொற்றின் போக்கு மாறி வருவதாகக் கூறியுள்ளதாக , 20,30, 40 வயது இளைஞர்கள் மூலம் அதிகளவில் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தகேஷி கசாய் எச்சரித்துள்ளார்.

ஜப்பான், பிலிபைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 3ல் இருந்து 2 பங்கினர் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் இரட்டிப்பு ஆக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் தகேஷி கசாய்,கிருமித் தொற்றின் போக்கு மாறி வருகிறது. 20,30,40 வயதுகளில் உள்ளவர்களால் அதிக அளவு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதில் பலருக்கு, சிறிய அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே தென்படுவது இல்லை.இதனால் தமக்கு தொற்று இருப்பது தெரியாமலேயே, கிருமி பரவலுக்கு காரணமாகி விடுகின்றனர்.இதன் எதிரொலியாக மக்கள் நெருக்கம் மிக்க நகரங்களில் உள்ள முதியவர்கள், நோயாளிகள் எளிதில் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி விடும் அபாயம் உள்ளது.

Tags : WHO , Youth, Corona, Virus, Risk, Doubling, World Nations, WHO, Alert
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...