×

லஞ்சம் வாங்கிய புகாரில் சென்னை சுங்கத்துறை அதிகாரி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ : அதிகாரி வீட்டில் இருந்து ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல்!!

சென்னை : லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய சென்னை சுங்கத்துறை அதிகாரி உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. சுங்கத்துறை வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள துக்ளகாபாத்தில் சுங்கத்துறைக்கு சொந்தமான கண்டெய்னர் டிப்போவில் அப்ரைஸராக பணிபுரிந்து வந்தவர் சவுரவ் ஷர்மா, தற்போது பணி மாறுதலுக்கு உள்ளாகி சென்னை சுங்கத்துறை தலைமை ஆணையர் அலுவலகத்தில் அப்ரைஸராக பணிபுரிந்து வருகிறார்.டெல்லியில் பணியற்றிய போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கிடங்கில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் இறக்குமதி பொருட்களை கிடங்கில் இருந்து வெளியே அனுப்ப லட்சக்கணக்கில் தரகர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுள்ளார். சென்னைக்கு திடீரென பணியிடமாற்றம் பெற்றதை அடுத்து, தான் செய்து முடித்து கொடுத்த பணிக்காக ரூ. 7 லட்சத்தை லஞ்சம் பணம் பாக்கியை சுங்கத்துறை முகவர் மீரஜ், தரகர் ராம் மிஸ்ரா மற்றும் கிஷோர் குமார் என்பவர் மூலமாக  வசூலிக்க முற்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த சிபிஐ அதிகாரிகள், சவுரவ் ஷர்மா தவிர மீதம் உள்ள 3 பேரை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. டெல்லி, நொய்டா, சென்னை ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். 


Tags : CBI ,Chennai ,officer ,customs officer ,house ,arrests , Bribery, Chennai, Customs, Officer, Arrest, CBI
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...