×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27.67 லட்சமாக அதிகரித்தாலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 20.37 லட்சமாக உயர்வு : ஒரே நாளில் 60,091 பேர் குணமடைந்தனர்!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27.67 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 52 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 64,531 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,67,273 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,092 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 60,091 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 18.62 லட்சத்திலிருந்து 20,37,870 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,76,514 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7,665 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,40,948 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1,56,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் 139 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,201 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 79,782 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49 பேர் உயிரிழந்த நிலையில் 931 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,05,193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து 7,219 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17,697 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,709  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 121 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,787-ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 பேர் உயிரிழந்த நிலையில் 3,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,753 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்து 2,528 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  27,535 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,758 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 10 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 169 -ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 31,394 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 16,274 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. ஆந்திராவில் ஒரே நாளில் 9 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதுவரை 3 லட்சத்தி 6 ஆயிரத்தி 261 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 85,130 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 2 லட்சத்து 18 ஆயிரத்து 311 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2820 பேர்  கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  24 மணி நேரத்தில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் ஒரே நாளில் 1,374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,741 ஆக அதிகரித்துள்ளது.இன்று 12 பேர் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,226 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 11,068 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,39,447 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : outbreak ,Corona ,India , India, corona, vulnerability, lakh, healed, number, rise
× RELATED ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு...