×

பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

குன்றத்தூர்: போரூர் அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). பொறியியல் படித்து விட்டு, ஆன்லைனில் வகுப்பு எடுத்து வந்தார். தனது தோழி ஸ்ரீவிஜயா என்பவருடன், விக்னேஸ்வரன், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த வேன், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஸ்வரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். ஸ்ரீவிஜயா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர். காயமடைந்த ஸ்ரீவிஜயா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Tags : Van ,teenager , Bike, van collision, walker killed
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை