×

இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய பாக்சிங் தள்ளிவைப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜெய் கவுலி கூறியதாவது: ஆசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்து. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தேக்கநிலை ஏற்பட்டது. ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் திங்கட்கிழமை இரவு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், கொரனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2021ல் எப்போது போட்டியை நடத்துவது என்பது குறித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஏஎஸ்பிசியின் அடுத்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு கவுலி கூறியுள்ளார். ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் இந்தியாவில் கடைசியாக 1980 (மும்பை, ஆண்கள்) மற்றும் 2003ல் (ஹிசார், பெண்கள்) நடந்துள்ளது. 


Tags : India ,Asian , India, which was to take place, Asian boxing, postponed
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!