×

அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

இலுப்பூர் : அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 3 மாட்டு வண்டிகளை அன்னவாசல் போலீசார் பறிமுதல் செய்தனர்.அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்து அதை ஓரு இடத்தில் குவித்து வைத்து பின்னர் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்த அன்னவாசல் போலீசார் நேற்று காலை பரம்பூர் பகுதியில் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.பரம்பூர் அருகே உள்ள கோரையாறு பகுதியில் உள்ள காரசூரம்பட்டியில் சோதனை மேற்கொண்டனர். போது அதன் வழியே வந்த 3 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். இதையடுத்து மணலுடன் மாட்டு வண்டியை அன்னவாசல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மாட்டுவண்டி ஓட்டி வந்த பரம்பூர் பகுதியை சேர்ந்த புதுப்பட்டி அழகப்பன்(49) மற்றும் குமரேசன்(25), காரசூரபட்டியை சோ்ந்த ராஜேந்திரன் ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Anvasal ,Lilipur ,Anawasal ,
× RELATED அம்மிக்கல்லை தலையில் போட்டு காதல் மனைவி கொலை: கணவன் வெறிச்செயல்