×

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் பெங்களூருவில் கைது: தேசிய புலனாய்வு படை அதிரடி

பெங்களூரு: பெங்களூருவில் தங்கி இருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரை தேசிய புலனாய்வு படையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு பசவனகுடியில் இருந்து வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களாக நோட்டமிட்ட என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை பெங்களூருவில் உள்ள அடுக்குமாடியில் அறை ஒன்றை சுற்றி வளைத்தனர்.

இதில் உள்ளே இருந்தவரை கைது செய்தபோது, அறையில் கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு தொடர்பு சாதனங்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். கைது செய்தவரிடம் விசாரணை நடத்தியபோது, அப்துல் ரஹ்மான் என்று தெரியவந்தது. பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் இவர் வங்கதேசத்தில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளுடன் மட்டுமில்லாமல் சிரியாவில் இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது.

மேலும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ்கேபி அமைப்பை சேர்ந்த தீவிரவாதியுடனும் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த 2014ம் ஆண்டு சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர்கள் தங்கி இருந்த முகாமிற்கு சென்று 10 நாட்கள்  காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததை ஒப்பு கொண்டதுடன் பெங்களூரு மற்றும் டெல்லியில் பெரியளவில் தாக்குதல் நடத்த சர்வதேச அளவில் திட்டமிட்டிருந்த தகவலை தெரிவித்ததாக தேசிய புலனாய்வு படை வட்டாரம் மூலம் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மானை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

Tags : group ,Supporter ,National Intelligence Force Action ,Bangalore , Supporter of IS Terrorist Organization, Bangalore, Arrested, National Intelligence Force, Action
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.