×

சின்னமனூர் அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வராத அதிகாரிகள்: பொதுமக்கள் சாலை மறியல்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வராத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே புலிக்குத்தியைச் சேர்ந்த 50 வயது ஜவுளி வியாபாரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ஜவுளி வியாபாரி இறந்தார். அவரது உடலை சுகாதாரத்துறையினர் பிளாஸ்டிக் பையால் சுற்றி, ஆம்புலன்ஸில் ஏற்றி முன்னறிவிப்பின்றி புலிக்குத்தி கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸை ஓட்டி வந்த டிரைவர் கிராம மயானத்தில் உடலுடன் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சென்று விட்டார். தகவலறிந்து மயானத்திற்கு சென்று பார்த்தபோது ஜவுளி வியாபாரியின் உடல் ஆம்புலன்ஸில் இருந்தது. முறையாக அடக்கம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வராததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் புலிக்குத்தி - சின்னமனூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம ஊராட்சி தலைவர் சுப்புராஜ், போலீசார், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனே வரவில்லை. இரவில் தாமதமாக வந்த அதிகாரிகள் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



Tags : Corona ,road ,deceased ,Chinnamanur ,blockade , Cinnamanur, Corona, officers, road block
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி