×

‘கல்லிலே இசை வண்ணம் கண்டார்’ நாதஸ்வரம், வாள் சிற்பங்கள் செதுக்கி மாணவர் அசத்தல்

திருப்பரங்குன்றம்: பிளஸ் 1 படிக்கும் மாணவர் சிற்பியாக மாறி கல்லில் நாதஸ்வரம், வாள் உள்ளிட்ட அழகிய கற்சிற்பங்களை உருவாக்கி வருகிறார். மதுரை மாவட்டம், திருநகரை சேர்ந்தவர் ஸ்தபதி பாலமுருகன். இவர் விளாச்சேரியில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். இவருடைய 2வது மகன் கார்த்திக்ராஜா(16). பிளஸ் 1 மாணவர்.  கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால், சிற்ப கலைக்கூடத்திற்கு சென்று தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளார். சிற்பம் செதுக்குவதிலிருந்த ஆர்வத்தால் கற்களாலான நாதஸ்வரம், வாள், மணி, குத்துவிளக்கு போன்றவற்றை சிற்பமாக செதுக்கியுள்ளார்.

இவர் செதுக்கிய நாதஸ்வரம் 1.50 அடி நீளமும், 1.50 கிலோ எடையும் கொண்டது. ஒரே கல்லில் நாதஸ்வரத்தை வடிவமைத்துள்ளார். இந்த நாதஸ்வரத்தை கொண்டு இசைக்கலைஞர்கள் வாசிக்கும்போது, மரத்திலான நாதஸ்வரத்தில் வரும் சுதி 75 சதவீதத்திற்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் கற்களாலான நாதஸ்வரம் கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய கோயில்களில் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு பல்வேறு தரப்பினரை பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவனின் இந்த முயற்சி பெரும் வரவேறப்பை பெற்றுள்ளது.

சின்னமனூர் அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வராத அதிகாரிகள்: பொதுமக்கள் சாலை மறியல்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வராத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே புலிக்குத்தியைச் சேர்ந்த 50 வயது ஜவுளி வியாபாரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ஜவுளி வியாபாரி இறந்தார். அவரது உடலை சுகாதாரத்துறையினர் பிளாஸ்டிக் பையால் சுற்றி, ஆம்புலன்ஸில் ஏற்றி முன்னறிவிப்பின்றி புலிக்குத்தி கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸை ஓட்டி வந்த டிரைவர் கிராம மயானத்தில் உடலுடன் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சென்று விட்டார். தகவலறிந்து மயானத்திற்கு சென்று பார்த்தபோது ஜவுளி வியாபாரியின் உடல் ஆம்புலன்ஸில் இருந்தது. முறையாக அடக்கம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வராததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் புலிக்குத்தி - சின்னமனூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம ஊராட்சி தலைவர் சுப்புராஜ், போலீசார், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனே வரவில்லை. இரவில் தாமதமாக வந்த அதிகாரிகள் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags : Stone ,student carving sword sculptures , Music saw color, Nataswaram, sword sculptures
× RELATED மிசோரமில் கனமழையால் நிலச்சரிவு 22 பேர்...