×

'அணியின் பயங்கர நாயகன்': சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து ராகுல் டிராவிட் பாராட்டு

மும்பை: சுரேஷ் ரெய்னா அணியின் பயங்கர நாயகன் என்று ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு முடிவு அறிவித்ததை அடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பேசிய வீடியோவை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
அண்மையில் இந்திய அணி வீரர்கள் எம்.எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ரெய்னா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, இந்திய பீல்டிங் தரத்தை உயர்த்தியதாகவும், அனைத்தையும் செய்ததாகவும் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார். ரெய்னா 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மிக நன்றாக விளையாடினார். அப்போது அவர் இந்திய அணியின் மிக மிக முக்கியமான வீரராக இருப்பார் எனக் கருதினேன். கடந்த பாதி தலைமுறையாக இந்திய அணி பல வெற்றிகளையும், நினைவுகூறத்தக்க நிகழ்வுகளையும் பெற்றுள்ளது. அதில் ரெய்னாவின் பங்கு அளப்பறியது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், சாம்பியன் ஷிப் போட்டிகளில் அவரது பங்கு அபாரமாக இருந்தது.

அதேபோல பீல்டிங்கிலும் ரெய்னா பங்கு அதிகம். கிரிக்கெட் மீதான ஆர்வம் உள்ளிட்டவை ரசிக்கத்தக்கவையாக இருந்துள்ளன. இந்திய அணியில் அவருக்கு கீழ் வரிசையில் பேட்டிங் வழங்கப்பட்டது. ஆனால் மேல் வரிசையில் வழங்கியிருக்கலாம். காரணம் சென்னை அணிக்காக அவர் மேல் வரிசையில் இறங்கி அபாரமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் உண்மையில் பயங்கரமான கிரிக்கெட் வீரர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஞ்சிக் கோப்பை போன்ற மாநில கிரிக்கெட் அணிகளுக்கு முன்னாள் வீரர்கள் அனைவரும் பயிற்சியாளர்களாக களமிறங்க வேண்டும் என்று தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களின் கிரிக்கெட் வாரிய பிரதிநிதிகள் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி உறுப்பினர்கள் பங்கேற்ற இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ராகுல் டிராவிட், முன்னாள் வீரர் சுஜித் சோமசுந்தர், பயிற்சியாளர் ஆஷிஸ் கௌஷிக் போன்றோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராகுல் டிராவிட், கொரோனா ஊரடங்கு காரணமாக வீரர்கள் யாரும் பயிற்சியில் ஈடுபடவில்லை. அதனால் வீரர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டுமென்றால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பயிற்சியாளராக மாறவேண்டும் என்று கூறினார்.



Tags : Team ,Rahul Dravid ,Suresh Raina ,Terrible Man ,retirement , Suresh Raina, Rahul Dravid
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...