×

வருசநாடு அருகே பராமரிப்பின்றி கிராமச் சாலை கண்டம்: குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி

வருசநாடு: வருசநாடு அருகே, சீலமுத்தையாபுரம் மேல்வாலிப்பாறை கிராமச் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வருஷநாடு அருகே, தும்மக்குண்டு ஊராட்சியில் சீல முத்தையாபுரம் மேல்வாலிப்பாறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தும்மக்குண்டுக்கு செல்லும் சாலை 5 கி.மீ தூரம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகனப் போக்குவரத்துக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கிராம பலமுறை மயிலாடும்பாறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.
இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த போஸ் கூறுகையில், ‘சாலை சீரமைக்க, சில மாதங்களுக்கு முன், மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் துறை சார்பில் அளவீடு பணி செய்தனர். அப்போது விரைவில் சாலை சீரமைக்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. குண்டும், குழியுமான சாலையில் இரவு நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.



Tags : Village road continent ,Varusanadu ,suffering , Varusanadu, village road, bomb, pit, public
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்