×

அரசு வேலைகளில் மத்தியப் பிரதேச மாநில இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்!

போபால்: அரசு வேலைகளில் மத்தியப் பிரதேச மாநில இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஒற்றை குடிமக்கள் கணக்கீடுக்கு மாநில அரசு தயாராகி வருகிறது. அதனால், ஒவ்வொரு சலுகைக்கும் மாநில மக்கள் தனித்தனியாக பதிவு செய்யவேண்டாம். அரசு வேலையில் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று பேசிய சிவராஜ் சிங் சவுகான், அனைத்து மத்தியப் பிரதேச அரசு வேலைகளும் இனிமேல் மாநில மக்களுக்காக ஒதுக்கப்படும். இதுதொடர்பான சட்டத்திருத்தங்கள் விரைவில் கொண்டுவரப்படும். மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும், 10வது மற்றும் 12வது வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாநில இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும். இது தொடர்பாக அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்புகள் பற்றாக்குறை இருக்கும்போது, மாநில இளைஞர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வது நம்முடைய கடமை, என  தெரிவித்துள்ளார்.

Tags : Shivraj Singh Chauhan ,Madhya Pradesh , Government Jobs, Madhya Pradesh, Youth, Priority, Chief Minister Shivraj Singh Chauhan
× RELATED வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா?...