ஹாங்காங்: ஹாங்காங்கில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்ற இந்தியர்கள் ஆங்காங்கே முடங்கும் சூழல் உருவானது. அவர்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்தியா கொண்டு வர வந்தே பாரத் திட்டம் துவங்கப்பட்டது. மே 7ம் தேதி துவங்கிய இந்த திட்டம் 4 கட்டங்களை நிறைவு செய்துள்ளது. 300 சர்வதேச விமானங்கள் மற்றும் 70 உள்நாட்டு விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 11ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து சுமார் 10.50 லட்சம் இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு தாயகம் அழைத்து வந்துள்ளது.