×

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி; மக்களுக்கு கிடைத்த வெற்றி : ஓபிஎஸ்,வைகோ, கமல், கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் மகிழ்ச்சி!!

சென்னை:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் பிரபலங்கள்  தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று. எனத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது. எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி.துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நீதி கிடைத்துள்ளது, என்றார்.

இதுகுறித்து பாஜகவின் சீனிவாசன் கூறுகையில், ஸ்டெர்லைட் வந்த ஆரம்பகாலத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்திருக்கிறோம். ஆனால் இப்போது பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. இப்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்,எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது, தீர்ப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவை நிறைவேற்ற வேண்டும். என்றார்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செலவும் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்றார்.

சமத்துவ மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது உயர்நீதிமன்றத்தின் ஆணை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைந்தது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இந்த தீர்ப்பை சமத்துவ மக்கள் கழகம் சார்பாக வரவேற்கின்றேன் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து நடந்த சட்டத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.தூத்துக்குடியில் நிலத்தடி நீரை மசைடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.போராட்டம் நடத்திய மக்களை சுட்டுக் கொன்ற காவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Tags : Leaders ,Kanimozhi ,Kamal ,Sterlite ,OPS Vaiko ,OPS , Sterlite, plant, judgment, justice, success, people, success, ops, waiko, kamal, kanimozhi, leaders, happiness
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...